‘ அன்பே டயானா’ படத்தில் ரிலீஸ் அப்டேட்

‘ அன்பே டயானா’ படத்தில் ரிலீஸ் அப்டேட்
‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன்,கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் அன்பே டயானா. இதில் அவருக்கு ஜோடியாக, ‘நீக்’படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.இதில் நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் சேத்தன்,பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்க, ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.சென்னை பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment