அமரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் மற்றும் சி.ஆர். ராஜன் தயாரிப்பில், இயக்குனர் அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அமரம்’.இதில்,தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மேலும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தக் கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை யைப் பேசும் ஒரு கதை. இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் தயாரிப்பாளரிடம் இருந்தது என்று இயக்குனர் அருள் கிருஷ்ணன் கூறினார்.