லோகேஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்

 

லோகேஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்
கூலி படத்துக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்,இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து ஐதராபாத்தில் அல்லு அர்ஜுனும் லோகேஷ் கனகராஜும் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை புஷ்பா பட தயாரிப்பாளர்கள் தயாரிக்க உள்ளனர். வரும் அக்டோபர் மாதத்தில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் அல்லு அர்ஜுன்நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் இறுதியில் நிறைவடைகிறது. அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க முடிவு செய்துள்ளார்.

Comments (0)
Add Comment