வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ள “ஆல் பாஸ்”

வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ள “ஆல் பாஸ்”
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்துள்ள படம் “ஆல் பாஸ் “. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி மைதீன் இயக்கியுள்ளார். இதில் துஷ்யந்த் கதாநாயகனாக நடிக்க, ஜனனி கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்திற்கு தில்ராஜு ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். படம் பற்றி இயக்குநர் மைதீன் கூறியது, வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி உள்ளனர். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வை பேசும் படமாக இதை உருவாக்கியுள்ளோம். 45 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து இருக்கிறோம் என்றார்.

Comments (0)
Add Comment