அக்ஷிதா சுரேஷ் குரலில் உருவான ஆல்பம்
இயக்குநர் யூகி பிரவீன் இயக்கத்தில், போபோ சசி இசையில் பாடகி அக்ஷிதா சுரேஷ் ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’ என்ற சுயாதீன இசை ஆல்பத்தை அமெரிக்க வாழ் தமிழரான சுரேஷ் பத்மநாபன் தயாரித்துள்ளார். இந்த இசை ஆல்பத்தை இசையமைப்பாளர் முரளி வெளியிட, இசையமைப்பாளர்கள் சி.சத்யா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா இணைந்து பெற்றுக் கொண்டனர்.விழாவில் இசையமைப்பாளர் சி. சத்யா பேசியது, பாடகி அக்ஷிதா சுரேஷ், தற்போது நான் இசையமைத்து வரும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.அந்த பாடலில் அவருடைய திறமை தெரிந்தது. அவர் இன்னும் பல உயரங்களை தொடுவார். அவருடைய குரல் தனித்துவமானது என்றார்.