அஜித் படம் கன்ஃபார்ம்: ஆதிக் கொடுத்த அப்டேட்
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமாரின் 64வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பது உறுதியாகி உள்ளது.இப்படம் கேங்ஸ்டர் திரைப்படமாக அல்லாமல் வேறு விதமாக இருக்கும்.
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும் என ஆதிக் கூறியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்றார்.
இந்த திரைப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சுப்ரீம் சுந்தர் சண்டை இயக்குநராக பணிபுரிய உள்ளார். அஜித்திற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதோடு நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.