பிப்ரவரி 15ஆம் தேதி அஜித் பட ஷூட்டிங் துவக்கம்

பிப்ரவரி 15ஆம் தேதி அஜித் பட ஷூட்டிங் துவக்கம்
அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்த படம் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் வசூலையும் குவித்தது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 63 வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனர் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஷூட்டிங் பற்றிய தகவல் தெரியாமல் இருந்தது. தற்போது துபாயில் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் அஜித் இம்மாதத்துடன் அந்த போட்டிகளில் முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறார். ஒரு சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு பிப்ரவரி 15ஆம் தேதி ஏ கே 63 படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்குகிறது. இந்த தகவலை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். அதேபோல் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், பிப்ரவரி பாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். இதில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கும். குட் கேட் அக்லி படம் ரசிகர்களுக்கானது. இந்தப் படம் குழந்தைகள், குடும்பமத்தினர் என அனைத்து ரசிகர்களுமானதாக இருக்கும். விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறினார்.

Comments (0)
Add Comment