ரூ. 15 கோடிக்கு கார் வாங்கிய அஜித்
கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித், தற்போது மறைந்த கார் பந்தய வீரர் அயர்டன் சென்னாவின் நினைவை போற்றும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய காரை வாங்கி உள்ளார். இது ஒரு ஸ்பெஷல் எடிசன் கார். மொத்தமாகவே 500 கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கார் சாதாரண சாலைகளில் ஓட்டுவது மிகவும் கடினம். ஆனால் கார் ரேஸ்க்காக உருவாக்கப்பட்டுள்ள ஓடுதளங்களில் சிறிய பாயும். அப்படிப்பட்ட இந்த காரை ரூ.15 கோடி கொடுத்து அஜித் வாங்கி இருக்கிறார்.