அல்லு அர்ஜுன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ராக்கா படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் போன்ற முன்னணி நடிகைகளும் நடிக்கின்றனர்.இந்நிலையில், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் இப்படத்தில் இணைந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இதில் எதிர்மறையான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது கதாபாத்திரம் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது . தற்போது தெலுங்கில் சாய் தரம் தேஜாவின் சம்பரால ஏடிகட்டு படத்தில் நடித்து முடித்து ள்ள ஐஸ்வர்யா விரைவில் மும்பையில் நடந்து வரும் ராக்கா படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது.