ஏ ஐ பயன்பாடு: கங்கை அமரன் எச்சரிக்கை

ஏ ஐ பயன்பாடு: கங்கை அமரன் எச்சரிக்கை
டிரம்ஸ் ஜெர்ரி எண்டடெயின்மென்ட் சார்பில் கிளாடி ஜெராடு தயாரித்துள்ள இசை ஆல்பம் ‘உயிரிணையே’. இதில் இடம் பெற்றுள்ள வரிகளை கங்கை அமரன் எழுத, சதா சுதர்சனம் இசையமைத் துள்ளார். இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கங்கை அமரன் பேசியது, முன்பெல்லாம் ஒரு பாடைல தொடரலையாக பாடுவோம். ஆனால் இப்போது ஒவ்வொரு வரிகளாக பாடுகின் றோம். ஏ.ஐ. இல் பீட் பண்ணிபாடுகின்றோம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஏ ஐ தொழில்நுட்பம் நம்மை கெடுத்துக் கொண்டிருக் கிறது. அதை நம்பி நாம் வேலை செய்தோமானா ல் பிற்காலத்தில் மூளை வேலை செய்யாது. நம்முடைய குழந்தைகளுக்கு சிந்திக்க தெரிய வேண்டும், எழுத தெரிய வேண்டும், வருங்கால த்தில் குழந்தைகளின் சுய ரூபத்தை இந்த ஏஐ கெடுத்து விடும் என்றார்.

Comments (0)
Add Comment