மீண்டும் அந்த 7 நாட்கள்
பாக்யராஜ்,அம்பிகா நடிப்பில் 1981-ம் ஆண்டு வெளியான படம் அந்த 7 நாட்கள். அந்த படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றதுடன் இன்றும் ரசிகர்களால் பேசப்படும் படமாக உள்ளது. இந்நிலையில் மீண்டும் அந்த 7 நாட்கள் என்ற பெயரில் படம் உருவாகிறது. எம்.சுந்தர் இயக்கி உள்ள இந்த படத்தை முரளி கபீர் தாஸ் தயாரித்து உள்ளார். படத்தில் பாக்யராஜ், நமோ நாராயணன்,
சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய்,வாசு சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.சச்சின் சுந்தர் இசை அமைத்துள்ளார். படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் கூறியது, படத்தின் கதை கேட்டு முடித்ததும் கே.பாக்யராஜின் அந்த 7 நாட்கள் டைட்டில் தான் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்து பாக்யராஜிடம் கேட்டு தலைப்பை வைத்துள்ளோம் என்றார்.