தயாரிப்பாளரான நடிகர் ரியோ ராஜ்

தயாரிப்பாளரான நடிகர் ரியோ ராஜ்
பிரபல இளம் நடிகரான ரியோ ராஜ், ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் இரண்டு புதிய படங்களை தயாரிக்க உள்ளார். அவரது நிறுவனத்துக்கு முதலீட்டாளர்களாக ரெட் ராக் பிக்சர்ஸ், மாலி அண்ட் மாணவி மூவி மேக்கர்ஸ் உள்ளது. இதில் முதல் தயாரிப்பை கதிரவன் இயக்க, ராம் நிஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.
சக்தி சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய, தேவ் பிரகாஷ் ரேகன் இசையமைக்கிறார். இAரண்டாவது படத்தை கே. சிவமுனீஸ்வரன் இயக்க, கே.ஜி.வருண் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் பொல்லாதது’ படங்களின் எடிட்டராக பணியாற்றியவர்.ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசைய மைக்கிறார்.இதன் மூலம் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என ரியோ ராஜ் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment