நடிகரான எம் .எஸ்.தோனி
கிரிக்கெட் வீரர்கள் சடகோபன் ரமேஷ், ஸ்ரீசாந்த், சுரேஷ் ரெய்னா ஆகியோரை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியும் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். நடிகர் மாதவனுடன் கேப்டன் கூல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசரை நடிகர் மாதவன் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அந்த டீசரில் மாதவனுடன் ராணுவ அதிகாரி கேரக்டரில் தோனி நடித்து இருக்கிறார்.மாதவனும்,தோனியும் குண்டு துளைக்காத உடையில் சன் கிளாஸ் அணிந்தபடி இருக்கின்றனர். ஆனால் இது படமா, வெப் தொடரா அல்லது விளம்பரமா என உறுதி செய்யவில்லை. இதை இயக்குனர் வாசன் பாலா இயக்கி உள்ளார்.