ஜனநாயகன் படம் மீது அதிகார துஷ்பிரயோகம்!

ஜனநாயகன் படம் மீது அதிகார துஷ்பிரயோகம்!

ரசிகர்கள் தவிர்ப்பு: திரையுலகம் கொதிப்பு

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நடிகர்கள், இயக்குனர்கள்

சென்னை ஜன.9: நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்று வெளியாக இருந்த நிலையில், சென்சார் சான்று கிடைக்காததால் படம் தள்ளி வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ் திரை உலகமே குரல் கொடுத்து வருகிறது. விஜய் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விஜய் நடிப்பில் இன்று வெளியாக இருந்த படம் ‘ஜனநாயகன்’.இநத படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்பட்டு வந்ததால் தயாரிப்பு நிறுவனமான கே வி என் புரொடக்ஷன்ஸ், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதில் தணிக்கை சான்று வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும்
சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். நேற்று முன்தினம் இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, வழக்கு விசாரணையை இன்று (9ம் தேதிக்கு)தள்ளி வைத்தார். இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. அந்த அறிக்கையில், கனத்த இயத்துடன் இந்த அப்டேட்டை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் கட்டுப்பாட்டை மீறியுள்ள ஒரு சூழலில் ஜனநாயகன் படம் தள்ளிப்போகிறது. இந்த படத்தை சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்கிறோம். இந்த முடிவு எங்களில் யாருக்கும் எளிதான ஒன்றல்ல. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்போம். உங்கள் அசைக்கமுடியாத ஆதரவே எங்கள்மிகப் பெரிய பலம் என அதில் கூறிப்பட்டு இருந்தனர்.இதனால் ஜனநாயகன் படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. ஜனநாயகன் பட விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் அமீர்:- ஒரு படைப்பை சுதந்திரமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாத அளவுக்கு ஒரு அதிகார துஷ்பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகம் படத்துக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து:-, இது ஒரு அதிகாரதுஷ்பிரயோகம். ஒரு படம் என்பது தனி நபரின் உழைப்பு அல்ல. அதில் நூற்றுக்கணக் கான பேர் உழைப்பும், பணமும் இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொண்டாடு வோம். தலைவன் படம் எப்போ ரிலீசோ அப்போ தியேட்டர் பக்கம் போகிறேன்.

நடிகர் சிபிராஜ்:- , ஜனநாயகன் ரிலீசை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒரு மாபெரும் வெற்றிக்கான சரியான களத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றன. நம்பிக்கையோடு இருங்கள்… நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

நடிகர் சிலம்பரசன்:- அன்பு விஜய் அண்ணா, தடைகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. இதைவிடப் பெரிய புயல்களைக் கடந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும். உண்மையான திருவிழா ‘ஜனநாயகன்’ வெளியாகும் நாளில் தான் தொடங்கும்.

நடிகர் ஜெயம் ரவி :-விஜய் அண்ணாவுக்கு ஓப்பனிங் தேவையில்லை. அவர் படம் எந்த நாள் வந்தாலும் அன்றைக்கு செம ஓப்பனிங் இருக்கும். அவர் படம் எப்போது ரிலீஸ் ஆகிறதோ அன்றுதான் பொங்கல்.

இயக்குனர் வ.கவுதமன் :ஜனநாயகனை தேடி அடிச்சு அராஜகம் பண்றாங்க… எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தின் போது நடந்த அதே பிரச்சினைதான் தற்போது விஜய்க்கும் வந்திருக்கிறது. ‘ஜனநாயகன்’ படம் ஓடக்கூடாது என்பதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்வார்கள். ஜனநாயகன், பராசக்தி என இரு படத்திற்கும் இடையில் நடப்பது ஒரு அரசியல் யுத்தமாகவே பார்க்கிறேன்.

இயக்குநர் வெங்கட்பிரபு:-எது எப்படியானாலும் சரி… இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய பெர்வல் படமாக இருக்கும்

நடிகர் சாந்தனு :-ஜனநாயகன் வெளியீட்டுடன் தான் பொங்கல் தொடங்கும். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். விஜய் அண்ணா நான் உங்களுக்கு ஒரு சகோதரனாக துணை நிற்பேன்.

நடிகர் அசோக் செல்வன் :-சினிமாவில் அரசியல் இருக்கக் கூடாது. அப்படி ஜனநாயகம் விஷயத்தில் அரசியல் உள்நோக்கம் இருந்தால் அது தவறு.

ஜனநாயகன் பட ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் முன் பதிவுக்காக வாங்கப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி மலேசியா உள்ளிட்ட வெளிநாடுக ளிலும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த பொங்கலை விஜய்யின் ஜனநாயகன். படத்துடன் கொண்டாட காத்திருந்த ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு இது சோகமான பொங்கலாக மாறி உள்ளது.

விஜய் சொன்னது நடந்துருச்சு ..
மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசும் போது, ‘சும்மாவே என்
படத்துக்கு பிரச்சினை வரும்.இதுல வேற நான் வேற பாதையை நோக்கி போகிறேன். எப்படி சார் இந்த நேரத்தில் படத்தை எடுத்து பண்றீங்களே? பரவாயில்லையா என கேட்டேன். அதற்கெல்லாம்
யோசிக்காம படம் பண்ணலாம் என தயாரிப்பாளர் சொல்லி விட்டார் என விஜய் பேசியிருந்தார். அவரது பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

“நீ வா தல …”
நாங்க இருக்கோம்: நடிகை சனம்ஷெட்டி “பொங்கலுக்கு படம் வரலன்னா என்ன? படம் திரைக்கு வரும்
நாள் தான் நமக்கு பொங்கல்.நாங்கள் விஜய்யை கைவிட மாட்டோம். நீ வா தல… நாங்க இருக்கோம்” என நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

 

Comments (0)
Add Comment