சாராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்

சாராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி வெளியான படம் ‘துரந்தர்’. இந்தப் படத்தில் நாயகியாக சாரா அர்ஜூன் நடித்திருந்தார்.கடந்த ஜனவரி 30-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியான இப்படம் 22 நாடுகளில் நம்பர் 1 டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. திரையரங்குகளில் ரூ.1300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய இந்தப் படம் ஓடிடியிலும் டிரெண்டாகி இருப்பதால் படத்தின் ஹீரோயின் சாரா அர்ஜுனுக்கு குவியத் தொடங்கியுள்ளது. பல பாலிவுட் இயக்குனர்கள் சாரா வீட்டிற்கு படையெடுத்து வருகின்றனர். தமிழில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் சாரா. அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் இளவயது கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment