தமிழில் அறிமுகமாகும் அபர்ஷக்தி குரானா
சூரிய பிரதாப் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரூட் – ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ . இதில், கௌதம் ராம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க, பாவ்யா திரிகா ஹீரோயினாக நடிக்க, மற்றொரு ஹீரோயினாக பாலிவுட் நடிகை அபர்ஷக்தி குரானா இந்த படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். மூத்த நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சை-ஃபை கிரைம் த்ரில்லர் படமாக இதை வெருஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவு பெற்றுள்ளது.முதல் கட்டப் படப்பிடிப்பில்இரு முன்னணி நடிகர்களின் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.