கம்பேக் கொடுக்கும் அபாஸ்
90களின் இறுதியில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார். நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து, தற்போது பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படம், பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். இதனை ஜெயவர்த்தனன் தயாரிக்க, மரியா ராஜா இலஞ்செழியன் இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீ கௌரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.