ராசி அழகப்பன் இயக்கும் ‘ஆண்ட’

ராசி அழகப்பன் இயக்கும் ‘ஆண்ட’
மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த ‘வண்ணத்துப்பூச்சி’ படம் பலரது பாராட்டை பெற்றது. மேலும் தமிழக அரசின் இரண்டு விருதையும் பெற்றது.இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர், இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ‘குரங்கு பெடல்’ படம் உருவாக்கப்பட்டது. தற்போது ‘ஆண்ட’ என்ற படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் ராசி அழகப்பன் ஏற்றுள்ளார். ஜென்சி கிட்ஸ் பார்வையில் தொடங்கி,80களின் வாழ்க்கை சூழலை உயிர்ப்புடன் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு “லைஃப் டைம் ஸ்டோரி”யாக ‘ஆண்ட’ உருவாகிறது.

Comments (0)
Add Comment