3வது திருமணம் செய்து கொண்ட அமீர்கான்

3வது திருமணம் செய்து கொண்ட அமீர்கான்
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் தனது காதலி கௌரி ஸ்ப்ராட்டை மும்பை பாலிஹிலில் உள்ள அவரது இல்லத்தில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து பின்னர் விவாகரத்து பெற்ற அமீர்கான் தற்போது தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். 3-வதுதிருமணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமீர்கான்,நான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தவுடன் எங்கள் இல்லத்திலேயே நடத்திக் கொள்ள தீர்மானித்தேன். எளிய முறையில் உறவினர்கள் மட்டும் பங்கேற்ற இந்த திருமணத்தில் எனது மகன் ஜூனை கானும் கலந்து கொண்டார் என்றார்.

Comments (0)
Add Comment