மலையாளத்தில் ரீமேக்காகும் ‘ஆதார்’
ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டு களையும் சர்வதேச விருதுகளையும் குவித்த ‘ஆதார்’ தமிழ் படம் தற்போது மலையாள த்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.மலையாளத்திலும் ‘ஆதார்’ என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்க யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இது குறித்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் கூறியது, “கார்ப்பரேட் உலகில் லாப நோக்கத்திற்காக சாமானிய மனிதர்கள் எவ்வாறு அலைக்கழிக்க ப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமா கவும் விறுவிறுப்பாகவும் ‘ஆதார்’ எடுத்துரைக்கும்.யோகி பாபு நடிக்க மலையாளத்தில் இந்த படத்தை இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.