இணையத்தை தெறிக்க விட்ட விஜய் பட வீடியோ
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது. நெருப்பு பிளம்புக்கு இடையே போலீஸ் உடையில் ஃபயர் போல் வந்த விஜய்யை ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசித்து வருகின்றனர். அதோடு ஒரு உண்மையான தலைவர் அதிகாரத்திற்காக அல்ல, மக்களுக்காகவே உருவாகிறார்.. என்று விஜய் பேசும் வாசகம் செம ஹைலைட்டாக அமைந்தது.இதனை சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.