ஸ்ரீலீலாவுக்கு தமிழில் சிவப்பு கம்பள வரவேற்பு
தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகமான நடிகை ஸ்ரீலிலா குறுகிய கால கட்டத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார். ‘புஷ்பா-2’ படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.தொடர்ந்து பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இதில் ரத்னமாலா என்ற கேரக்டரில் நடித்த அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 55-வது படத்திலும் ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள அவரின் 63 வது படத்திலும் ஸ்ரீலீலா கமிட் ஆகி இருப்பதாக தகவல் வந்துள்ளது.
அதோடு மேலும் ஒரு சில படங்களுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.