உலக அளவில் ட்ரெண்டிங் ஆன ரஹ்மானின் முன் வாக் பட பாடல்கள்
மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில்,ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் படம் ‘மூன் வாக்’. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் எ ஆர் ரஹ்மான் பாடியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதில் இடம்பெற்றுள்ள ‘ஏத்து’ பாடலுக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த குழந்தைகளின் இசைக்குழுவினர் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதோடு ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் முன் வாக்கு பட பாடல்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அவர்கள் அனைவருக்கும் ஏ.ஆர்.ரகஹ்மான் நன்றி தெரிவித்து உள்ளார்.