‘ மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்

‘ மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்
அறிமுக இயக்குனர் மனோஜ்,என் .எஸ். இயக்கத்தில் பிரபுதேவா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மூன்வாக்.பிஹைன்ட் வுட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பல்வேறு வகைகளில் புதுமைகளை கொண்டு வரவுள்ளது. முதன்முறையாக ஏ.ஆர். ரஹ்மான் நடிகராக இந்தப் படத்தில் தோன்றுகிறார்.மேலும், இதில் 5 பாடல்களை அவரே பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் என்ற தன் வழக்கமான அடையாளத்தைத் தாண்டி, “ஒரு கோபமான இளம் திரைப்பட இயக்குநர்” என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றுவது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கும். இதன் இசை வெளியீட்டு விழா 4-ஆம் தேதி, சத்தியபாமா பல்கலைக் கழகத்தில் நடைபெற வுள்ளது.

Comments (0)
Add Comment