வசனம் இல்லாத படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்
‛பாகமதி, துர்காமதி’ படங்களை இயக்கிய ஜி. அசோக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் உப் யே சியாபா. இதில் நடிகர்கள் சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா பதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரித்துள்ள இப்படம் நகைச்சுவை, த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. ஆனால் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் படத்தில் எந்தவொரு வசனமும் இல்லையாம். எந்த வசனங்களும் இல்லாமல் நகைச்சுவை மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் இசையை மட்டும் நம்பி படம் எடுத்துள்ளனர்.