மிருணாளை வெட்கப்பட வைத்த நிகழ்ச்சி
நடிகை மிருணாள் தாக்கூர் தற்போது ‘டக்கோய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல தயாரிப்பாளரும், நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, ‘மிருணாள் தாக்கூர் தென்னிந்திய படங்களில் அதிகமாக நடிக்க வேண்டும். அதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அவர் ஒரு தென்னிந்திய நடிகரை திருமணம் செய்து கொண்டு இங்கேய செட்டில் ஆக வேண்டும்’ என கலகலப்பாக பேசினார். அவரின் பேச்சைக் கேட்டு மிருணாள் தாக்கூர் வெட்கத்தில் சிரித்தார்.