பஹத் பாசில், ராஜமவுலி கூட்டணியில் உருவான படம்

பஹத் பாசில், ராஜமவுலி கூட்டணியில் உருவான படம்
நடிகர் பஹத் பாசில், இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணியில் ஒரு மாயாஜால நிகழ்வாக ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் என்ற படம் உருவாகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ளார். ஷோயிங் பிசினஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ். கார்த்திகேயா மற்றும் ‘பாகுபலி’ படத்தை தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் பேண்டஸி படமாக உருவாகி உள்ளது. காள பைரவா இசை அமைத்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் ஒரு சிறுமிக்கு பஹத் பாசில் மேஜிக் செய்து காட்டுவதுடன் டீசர் தொடங்குகிறது.இப்படம் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

Comments (0)
Add Comment