ரைசா வில்சன் நடிக்கும் பேண்டஸி திரில்லர் படம்

ரைசா வில்சன் நடிக்கும் பேண்டஸி திரில்லர் படம்
மாடலிங் துறை மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றவர் ரைசா வில்சன். அதன் பிறகு
‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்து பெரிய திரையில் நடிகையாக பயணத்தை துவக்கினார். மேலும் தனுஷ் உடன் விஐபி உள்ளிட்ட படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உள்ள ரைசா வில்சன் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் – தி அரைவல்’. இந்த படத்தை 20 க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மைலோ இயக்குகிறார்.‘பார்ட்னர்’ படத்தை தயாரித்த ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.யுவராஜ் சந்திரன் இசையமைக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ பாப் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் பேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது.

Comments (0)
Add Comment