முனீஸ் காந்த் நடிக்கும் பேண்டசி காமெடி படம்

முனீஸ் காந்த் நடிக்கும் பேண்டசி காமெடி படம்
அசோக்ராம் இயக்கத்தில் ஜே.பி.சினிமாஸ் ஜெயக்குமார் மற்றும் பிரீத்தி தயாரிப்பில்
உருவாகும் புதிய படத்தில் முனீஸ்காந்த் லீடு ரோலில் நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. விழாவில் மகாராஜா படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் பங்கேற்றார்.
இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி,
ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்ய, ஆனந்த் காசிநாத் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குநர் அசோக்ராம் பேசியது,‘பழமையான கேமரா ஒன்றை மையமாக வைத்து பேண்டசி காமெடி ஜானரில் இப்படம் தயாராகிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு அரங்கம் அமைத்து, அதில் படப்பிடிப்பு
நடத்துகிறோம்’ என கூறினார்.

Comments (0)
Add Comment