‘29’ விமர்சனம்
சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் விதுவுக்கும்,அவருடன் பணிபுரியும் பிரீத்தி அஸ்ராணிக்கும் காதல் உருவாகிறது. ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் பிரீத்தி அஸ்ராணி, எந்தவித லட்சியமும் இல்லாமல் இருக்கும் விதுவை, பிரிகிறார்.29 வயதில் தனக்கென ஒரு அடையாளம் இல்லாமல் இருக்கும் விது,தனது அடையாளத்துக்காக என்ன செய்தார் என்பதே படத்தின் மீதி கதை. வாழ்க்கையில் எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் இருக்கும் விதுவுக்குள் பிரீத்தி அஸ்ராணியின் லட்சிய காதல் புகுந்ததும் என்ன மாதிரியான மனநிலை ஏற்பட்டது என்பதை அழகான கவிதை போன்று கதை சொல்லி உள்ளார் இயக்குனர் ரத்ன குமார். நெகட்டிவ் கேரக்டரில் இருந்து ஹீரோவாக நடித்துள்ள விது, சத்யா கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி உள்ளார்.விஜி கேரக்டரில் இவரை விடுத்து வேறு யாரையும் யோசிக்க முடியாத அளவிற்கு நியாயம் சேர்த்துள்ளார் ப்ரீத்தி அஸ்ராணி. மேலும் அவினாஷ், கிரன், மாஸ்டர் மகேந்திரன், சிந்து சியாம், ஆதிரா பாண்டிய லட்சுமி, ஆறுமுகவேல் ஆகியோர் நடிப்பு பலம். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு, ஷான் ரோல்டன் இசை ரசிக்க வைக்கிறது.