ஆர்யாவுக்கு ஜோடியாகும் 2 ஹீரோயின்கள்
நடிகர் ஆர்யா தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்ததாக இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் தனது 40-வது படத்திற்காக ஆர்யா தயாராகி வருகிறார். இதில், டபுள் ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா என ரெண்டு பேரும் இதில் கமிட் ஆகி உள்ளனர். இவர்கள் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போட்டோவை தன் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்.