ரூ.80 கோடி பட்ஜெட் படத்தில் நாகசைதன்யா

ரூ.80 கோடி பட்ஜெட் படத்தில் நாகசைதன்யா
நடிகர் நாகசைதன்யா நடித்த தண்டேல் படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக விருபக்‌ஷா படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் தன்டு இயக்கத்தில் புதிய படத்தில் நாகசைதன்யா நடிக்கவிருக்கிறார். ரூ.80 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது. நாக சைதன்யா திரை உலக வாழ்க்கையில் ரூ.80 கோடி பட்ஜெட் படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாத இறுதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

Comments (0)
Add Comment