ராஜமௌலி படத்தில் பாடிய ஷ்ருதி ஹாசன்
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டு விழா வரும் 15 ம் தேதி அன்று ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட மாக நடைபெற உள்ளது. அதன் நேரடி ஒளிபரப்பை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியிடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின்போது போஸ்டருக்கான பாடல் விடியோவும் வெளியாகும் எனத் தெரிகிறது. சம்ஹாரி என்கிற இப்பாடலை நடிகை ஷ்ருதி ஹாசன் பாடியுள்ளார். எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இப்பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி கவனம் பெற்று வருகிறது.