ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ பட ரிலீஸ் அப்டேட்
‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கத்தில், நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகி உள்ள படம் கராத்தே பாபு. இதில் ஹீரோயினாக முன்னால் டிஜிபி மகள் தவ்தி ஜிவால் நடிக்கிறார். மேலும் கே.எஸ். ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். விறுவி றுப்பான அரசியல் திரில்லர் படமான இதை ‘ ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரித்துள்ளார். அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இதில் இணைந்துள்ளார். மேலும் ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையை பெற்றுள்ளது.இப்படம் ஆகஸ்ட் 28 அன்று வெளியாக உள்ளது.