நாளை ‘ஜெயிலர் 2’. ஃபர்ஸ்ட் சிங்கிள்

நாளை ‘ஜெயிலர் 2’. ஃபர்ஸ்ட் சிங்கிள்
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆகியோரும் கேமியோ ரோலில் நடிக்க, பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி யுள்ளதாகத் தகவல் வெளியானது.இப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை (21ம்தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment