நான் மாஸ் ஹீரோ இல்ல; நல்ல மனசுள்ள ஹீரோ: விமல்
இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் விமல் , நட்டி நட்ராஜ் நடித்துள்ள படம் வடம். மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள் ளார். வரும் 6 ஆம் தேதி வெளியாகும் இதன் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விமல் பேசியது, எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும். ஏனெனில் என் சக்தி என்ன என்று எனக்குத் தெரியும். ஆண்டவன் என்னை இந்த அளவில் வைத்திருந்தால் போதும். நம்மை நம்பி பணம் போடும் தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம் சம்பாதித்து கொடுத்தால் போதும். ஹீரோயின் பெயர் சனாஸ்கா. இந்தப் பெயரை கூப்பிடுவதெல்லாம் எனக்கு பெரிய டாஸ்காக இருக்கிறது. அவர் இந்த படத்தில் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். இமான் இசை இந்த படத்திற்கு பெரிய பலம் என்றார்.