தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜிகேஎம்.தமிழ் குமரன் தலைவராக தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜிகேஎம்.தமிழ் குமரன் தலைவராக தேர்வு

சென்னை,பிப்:23 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக ஜி கே எம் தமிழ்குமரன் தேர்வாகி உள்ளார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய பொறுப்பாளர்களின் பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் 3ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். அதன்படி 2026 – 29 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை‌ தேர்வு செய்யும் தேர்தல், நேற்று சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது.
தேர்தல் அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடந்தது.காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி,மாலை 5 மணி வரை நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 1 இணைச் செயலாளர், 26 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிட்டனர்.
இந்த முறை முரளி ராமசாமி தலைமையில் இராம நாராயணன் அணி, ஜி கே எம் தமிழ் குமரன் தலைமையில் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டனர்.
மொத்தம் 1,524 பேர் ஓட்டுரிமை பெற்றுள்ள உறுப்பினர்கள் ஆவர். இதில் இராம நாராயணன் அணியில் தலைவர் பதவிக்கு முரளி ராமசாமி மூன்றாவது முறையாக போட்டியிட்டார். செயலாளராக டி.டி.ராஜா, சண்முக பாண்டியன், துணைத் தலைவர்களாக விஜய் முரளி, மதியழகன், பொருளாளராக சி‌.வி.குமார், ஜாய், இணைச் செயலாளராக தயா பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 26 பேர் போட்டியிட்டனர்.
அதேபோல் நலம் காக்கும் அணியில் தலைவர் பதவிக்கு ஜி கே எம் தமிழ் குமரன் போட்டியிட்டார். செயலாளராக ராதாகிருஷ்ணன், கமீலா நாசர், துணைத் தலைவருக்கு கமலக்கண்ணன், ஆர்.கே. சுரேஷ், பொருளாளராக சுபாஷ் சந்திர போஸ், இணை செயலாளராக சுஜாதா விஜயகுமார் ஆகியோர் களமிறங்கினர். மேலும் 26 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இதுதவிர சுயேட்சை வேட்பாளராக பல்வேறு பதவிகளுக்கு பலர் போட்டியிட்டனர். தலைவர் பதவிக்கு மன்னன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். மேலும் கதிரேசன், ஜேஎஸ்கே சதீஷ்குமார், உள்ளிட்டோரும் சுயேட்சையாக நின்றனர்.தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 1171 பேர் வாக்களித்து இருந்தனர். இந்த வாக்குகள் உடனடியாக என்ன போட்டு நேற்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட தயாரிப்பாளர் ஜி.கே.எம் தமிழ் குமரன் 788 வாக்குகள் பெற்று தலைவராக தேர்வாணர்.அதேபோல் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.செயலாளர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட கதிரேசன் 715 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பாக்ஸ்
தயாரிப்பாளருக்கு பிரச்சனை நிறைய இருக்கு! ரஜினி
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்த நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசியபோது, தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். வெற்றி பெற்று வருபவர்கள் தயாரிப்பாளர்களுக்கு உள்ள முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

Comments (0)
Add Comment