சிவாஜி கணேசனின் திருவிளையாடல் ட்ரெய்லர் வெளியீட்டு விழா
ஏபி நாகராஜன் இயக்கத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த படம் திருவிளையாடல். சாவித்திரி, டி எஸ் பாலையா, முத்துராமன், நாகேஷ், தேவிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் எழுத, கே வி மகாதேவன் இசை அமைத்துள்ளார். அப்போது மாபெரும் வெற்றி படமாக அமைந்த அந்தப் படத்தை நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி. லதா மறு வெளியீடு செய்ய இருக்கிறார். அதை ஒட்டி திருவிளையாடல் படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி நடிகர் சிவாஜியின் 99 வது பிறந்தநாள் அன்று காசினோ தியேட்டரில் நடைபெற இருக்கிறது. தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் மகனான ஏ.என். பரமசிவம், நடிகர், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகர்கள் மகேந்திரன், இளவரசு, நடிகை வடிவுக்கரசி உட்பட பல பங்கேற்க உள்ளனர்.