சந்திரமுகி 2 விமர்சனம்

2005 இல் வெளியான பி.வாசுவின் சின்னத்திரை திகில் படமான சந்திரமுகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. ரஜினிகாந்த், ஜோதிகா நடித்த இப்படம் மலையாளத்தில் வெளியான மணிசித்ரதாழு படத்தின் ரீமேக் ஆகும்.

2012 செப்டம்பரில், சந்திரமுகியின் தொடர்ச்சிக்கான திட்டம் இருப்பதாக வாசு அறிவித்தார். இருப்பினும், திட்டம் நிறைவேற பல ஆண்டுகள் ஆனது. ஜனவரி 2020 இல், வாசு அதன் தொடர்ச்சிக்கான ஸ்கிரிப்டை முடித்துவிட்டதாகவும், ஒரு தயாரிப்பாளர் படத்தைத் தயாரிக்க முன்வந்ததாகவும் கூறினார்.

ரஜினியும் வடிவேலுவும் இணைந்து டெம்ப்ளேட் காமெடி டிராக்காக சில காட்சிகளை பி வாசு சந்திரமுகி படத்தில் வைத்திருப்பார். அந்த படத்தின் வெற்றிக்கு இந்த காட்சிகள்தான் மிகப் பெரிய அளவில் காரணமாக அமைந்தது. ஆனால் அதையே மீண்டும் முயற்சித்து வடிவேலு – ராகவா லாரன்ஸ் இணையை நடிக்க வைத்த பி வாசு இம்முறை தோற்றுவிட்டார். இதற்கு ராகவா லாரன்ஸ் நடிக்கும் படங்களின் காமெடி காட்சிகளே தேவையில்லை என்பது போல ஆகிவிட்டது.

ஒவ்வொரு காட்சிக்கும் வடிவேலு காமெடியை நினைத்து சிரிப்பதற்கு பதிலாக எப்படி இருந்த வடிவேலு இப்படி ஆகிட்டாரே என நினைத்து அழுகைதான் வருகிறது. பயமுறுத்தும் காட்சிகளுக்கு பெரிதாக மெனக்கெடாமல், இசையமைப்பாளரை பெரிதாக தொந்தரவு செய்யாமல் பேய் படம் எடுத்தால் அது இப்படித்தான் வந்து நிற்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

சந்திரமுகியமாக வரும் கங்கனா நிச்சயமாக மிரட்டி இருக்கிறார். ஜோதிகாவுடன் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் சந்திரமுகியாக வந்து அவரின் முழுத்திறனையும் காட்டி கலக்கியிருக்கிறார். இன்னொரு சந்திரமுகியாக வரும் இளம் நடிகை தன்னால் முடிந்தவரை ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் தனது வழக்கமான நடிப்பை சரியான விகிதத்தில் கலந்து அடித்திருக்கிறார். முனி, காஞ்சனா படங்களிலிருந்து மாறுபட்டு நடித்தது வேட்டையனாக வரும்போதுதான் போல. அதுவும் பெஞ்ச் மார்க்காக ரஜினி இருப்பதால் அவரை பின்பற்றி அதற்கு ஓரளவுக்கேனும் முயற்சி செய்திருக்கிறார்.

காஞ்சனா ஃப்ரான்சைஸ் போல சந்திரமுகி ஃப்ரான்சைஸையும் சைடில் ஓபன் செய்து வைத்திருக்கிறார்கள். படம் காலாண்டு விடுமுறையில் வந்திருப்பதால் போட்ட முதல் தப்பித்துவிடும் என்கிறார்கள். அப்படி வெற்றிப் படமானால் சந்திரமுகி 3, 4 என்று அடுக்கிவிடுவார்களோ?

சந்திரமுகி 2 கதைச் சுருக்கம் | Chandramukhi 2 Story Explained

சந்திரமுகி தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் படமாக இருந்தது, அதன் தொடர்ச்சியில் அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதில் ஆச்சரியமில்லை. சந்திரமுகி 2 திரைப்படம் ஒரு கவர்ச்சியான கதைக்களம் மற்றும் முன்னணி நடிகர்களின் வலுவான நடிப்புடன் காட்சிக்கு பிரமிக்க வைக்கும் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ராகவா லாரன்ஸ் தனது ஆற்றல்மிக்க நடிப்பிற்காகவும், நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் வேடங்களில் நடிப்பதற்காகவும் அறியப்பட்டவர். கங்கனா ரனாவத் இந்தி சினிமாவில் மிகவும் பல்துறை நடிகைகளில் ஒருவர், மேலும் அவர் குயின், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் மற்றும் மணிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி போன்ற படங்களில் தனது சக்திவாய்ந்த நடிப்பிற்காக அறியப்படுகிறார்.

ரங்கநாயகி (ராதிகா சரத்குமார்) குடும்பத்தில் அடுத்தடுத்து அசம்பாவித சம்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் பயத்தில் இருக்கும் அவர் தனது குடும்பம் மொத்தத்தையும் அழைத்துக் கொண்டு தங்களுடைய குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த திட்டமிடுகிறார்.

வேட்டைய புரம் அரண்மனைக்கு வரும் ரங்கநாயகியின் பெரிய குடும்பத்தினர் சந்திரமுகி பங்களாவில் தங்கிக் கொள்ள ஏற்பாடுகள் செய்கின்றனர். அங்கு ஏற்கனவே வந்து டரியலான கதாபாத்திரம் முருகேஷனும் இந்த குடும்பத்துடன் இணைகிறார்.

வழக்கம் போல அந்த சந்திரமுகி அறைக்கு யாரும் போகக் கூடாது என்று சொல்ல, அந்த பங்களா குறித்த அமானுஷ்ய கதைகளை கேட்கும் அந்த வீட்டின் இளம் பெண்களில் ஒருவர் சந்திரமுகி அறைக்கு மீண்டும் செல்ல, இந்த முறை உண்மையான சந்திரமுகியே இறங்கி வந்து ஆடுகிறது. அந்த பேய் யாருக்கும் பயப்படாமல் இருக்க, அப்ப இவர்தான் சரியான ஆள் என வேட்டையனை வரவழைக்கிறார்கள்.

இதுதான் சந்திரமுகி டெம்ப்ளேட்டில் அடைக்கப்பட்ட காஞ்சனா படத்தின் கதை.

Comments (0)
Add Comment