கொலையில் முடிந்த பேஸ்புக் காதல்
இயக்குனர் சேகர் கன்னியப்பன் இயக்கியுள்ள படம் ரகசிய சினேகிதனே. இதில் வேல்முருகன், ஸ்வேதா ஸ்ரீம்டன், குரு பிரகாஷ், பாக்கியராஜ், பிரதீபா, பிரசாந்தினி, நிஷா, கந்தவேலு ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய,சுரேஷ், மற்றும் எஸ்.சுப்பிரமண்யா இசை அமைத்துள்ளனர். புனிக புரொடக்ஷன்ஸ் சார்பில் லதா தயாரித்துள்ளார்.வரும் 26 ம் தேதி பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் என்.பி.இஸ்மாயில் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். படம் பற்றி இயக்குனர் கூறுகையில், சென்னையில் சந்தோஷமாக வாழும் கணவன் மனைவிக் கிடையே பேஸ்புக் மூலம் ஏற்படும் தவறான நட்பு கொலையில் முடிகிறது. இதன் விபரீதத்தை இந்த படம் விவரிக்கிறது என்றார்.