காமெடி திரில்லராக உருவாகியுள்ள ‘டே 11’
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஶ்ரீதிகா இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘டே 11’ .இப்படத்தை பி ஆர் ஜி ஜெகந்நாதன் பிக்சர்ஸ் பேனரில் ஶ்ரீதிகாவே தயாரித்தும் உள்ளார்.கலகலப் பான திரில்லராக உருவாகி உள்ள ‘டே 11’ திரைப்படத்தில் ஆதர்ஷ் மற்றும் மனோஜ் நாயகர்களாகவும் ஸ்வேதா அபிராமி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ரவிச்சந்திரன், அபிமன்யு, தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனில் இசையமைக்க, செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் குறித்து இயக்குநர் ஶ்ரீதிகா கூறியது, தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒன்றை இதில் கூறியுள்ளோம். ஒரு விசித்திர விளையாட்டுக்குள் நுழையும் கேரக்டர்கள், அதில் அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் தான் கதை என்றார்.