ஊர்வசி மகள் என்பதால் சினிமாவுக்கு வர தயங்கினேன்: தேஜலக்ஷ்மி
நடிகை ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகி மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், நான் சினிமாவிற்கு வர இருப்பதாக என் பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்கள் உடனே சம்மதித்தனர். இது எனது முதல் படம் என்பதால் நான் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் பல படங்களில் நடிக்க விரும்புகிறேன். நான் படித்து விட்டு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகுதான் சினிமாவிற்கு வந்தேன். சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமாவில் அதிக ஆர்வம் இருந்ததில்லை. அதோடு ஊர்வசி மகள் என்பதால் மக்கள் என் மீது வைக்கும் எதிர்பார்ப்புகளே எனக்கு பெரிய மன அழுத்தமாக இருந்தது. அதுதான் எனக்கு மிகப்பெரிய பயம். இதனால் நான் சினிமாவிற்கு வர தயங்கினேன் என்றார்.