யோகி பாபு 300வது படத்தின் ரிலீஸ் அப்டேட்
நடிகர் யோகி பாபுவின் 300-வது படமான ’அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் ஜூன் மாதம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
நகைச்சுவை நடிகராக பயணத்தைத் தொடங்கிய யோகி பாபு குறுகிய காலத்தில் கடின உழைப்பால் 300 படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்க, தேவ் சினிமாஸ் சார்பாக கிருத்திகாதங்கப்பாண்டி தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி ஆகியோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.