ஹரி படத்தில் புதிய பிரசாந்தை பார்க்கலாம்

ஹரி படத்தில் புதிய பிரசாந்தை பார்க்கலாம்
அந்தகண் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பிரசாந்த் தற்போது இயக்குனர் ஹரி இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜோய்ஸ் ஹோம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 50 ஜோய் இல்லங்கள் வழங்கும் விழாவில் பிரசாந்த் கலந்து கொண்டார். அவருடன் இயக்குனர் தியாகராஜன்,மைம்கோபி சந்தோஷ், நடிகைகள் தேவயாணி, சார்மி, இயக்குனர் சரண் மற்றும் அதன் குழும தலைவர் ஜோய் ஆலுக்காஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில் நடிகர் பிரசாந்த்பேசியது,பொதுவாக கல்யாணம் பண்ணிப்பார்,வீட்டை கட்டிப் பார் என்று சொல்வார்கள். அந்த வகையில் கஷ்டப்படும் 50 குடும்பத்து க்கு தரமான வீட்டைஜோய் கட்டிக் கொடுத் துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது நான் நடித்து வரும் ஹரி படத்தில் புதிய பிரசாந்தை நீங்கள் பார்க்கலாம் என்றார்.

Comments (0)
Add Comment