உதய்பூர் பேலஸில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் வரும் 26-ந் தேதி உதய்பூர் பேலஸில் நடைபெற உள்ளது. இவர்களின் திருமணத்தை ரசிகர்கள் மிகுந்த அன்போடு இருவரின் பெயரை இணைத்து விரோஷ் என கொண்டாடி வருகின்ற னர். இதுகுறித்து ராஷ்மிகா வெளியிட்டு ள்ள பதிவில், நீங்கள் அனைவரும் எங்கள் மீது அளவற்ற அன்புடன் எங்களை விரோஷ் என்று அழைத்தீர்கள். அதனால் இன்று நிறைந்த மனதுடன் உங்கள் அன்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாங்கள் இணைவதை அதே பெயரில் அழைக்க விரும்புகிறோம். எங்கள் இருவரையும் இவ்வளவு அன்புடன் தாங்கி நிற்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி என பதிவிட்டுள் ளார். இந்த நிலையில் திருமண ஏற்பாடுகளை கவனிக்க நேற்று விமான மூலம் இருவரும் உதய்பூர் பேலஸ் வந்து சேர்ந்தனர்.