வள்ளுவன் – விமர்சனம்
சமூக சேவையில் ஆர்வமுள்ள ஆஷ்னா சாவேரியை காதலிக்கிறார் சேத்தன் சீனு. அவரது வாழ்க்கையில், எதிர்பாராதவிதமாக நடக்கும் தொடர் கொலைகளும், அதனைச் சுற்றியுள்ள அரசியல் பின்னணிகளும் படத்தின் கதையாக மாறுகிறது.திருக்குறளின் நீதியைக் கொண்டு சமூகக் குற்றங்களை வேரறுக்கும் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஆரம்பக் காட்சிகளில் இருக்கும் மர்மம், எதிர்பார்ப்பும், படத்தின் 2ம் பாதியில் தொடராது ஏமாற்றம்.‘அந்நியன்’ பாணியில், கயவர்களைத் தண்டிக்கும் ஹீரோவாக சேத்தன் சீனு நடித்துள்ளார். திருக்குறளை மையமாக வைத்து தனது நீதியை நிலைநாட்டுகிறார். ஆஷ்னா சாவேரி அழகாக நடித்து, கிளைமாக்ஸ்சில் முத்திரை பதித்துள்ளார். மேலும் பிரேம், மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு, அஸ்வதின் இசை ரசிக்கும் ரகம்.