சோகத்திலும் சிரித்த ஊர்வசி: பாண்டியராஜ் பெருமிதம்

சோகத்திலும் சிரித்த ஊர்வசி: பாண்டியராஜ் பெருமிதம்
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பரிமளா அண்ட் கோ. இதில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு,சாண்டி, சஞ்சனா, அனந்திகா,பூர்ணிமா ரவி, ஜி.கே.எம்.தமிழ் குமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். காமெடி மற்றும் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ், தமிழ் குமரன் புரொடக்‌ஷன்ஸ், பசங்க புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. வரும் 28ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாண்டியராஜ் கூறியது, அத்தனை நடிகர்களின் கால்ஷீட்டோடு பாலக்காட்டில் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டோம். முதல் நாளில் ஊர்வசி படபிடிப்புக்கு வந்தவுடன் அவருடைய அண்ணன் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. நாங்கள் எல்லாம் பதறி போனோம். ஆனால் ஊர்வசியோ, ஷூட்டிங்கை கேன்சல் செய்ய வேண்டாம். எனக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி வேண்டும் என்றார். மறுநாள் வந்து முக்கியமான காமெடி காட்சியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து நடித்தார் என பெருமிதத்தோடு கூறினார்.

Comments (0)
Add Comment