ஜெய் பீம் இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்து சூர்யா

ஜெய் பீம் இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்து சூர்யா
கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற வெற்றி படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். இது அவரின் 48 வது படமாக உருவாகிறது. இந்த படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய தா. சே.ஞானவேல் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக கயாடு லோக்கர் நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ் யோகி பாபு குமரவேல் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். படத்திற்கு சாய் அபயங்கள் இசையமைக்க,எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். பூஜையுடன் துவங்கிய இந்த படத்தில் ஷூட்டிங் வரும் 22ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் செய்துள்ளார்.

Comments (0)
Add Comment