பிரம்மாண்டமாக வெளியான “ராமாயணா” படத்தில் டைட்டில் டீசர்

பிரம்மாண்டமாக வெளியான “ராமாயணா” படத்தில் டைட்டில் டீசர்
பாலிவுட் இயக்குனர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்து வரும் படம் ராமாயணா. இதன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் டைட்டில் முன்னோட்டம் நேற்று முன்தினம் வெளியானது. ஐதராபாத்தில் பிரசாத் மல்டி பிளக்ஸில் நடந்த பிரம்மாண்ட விழாவில் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டது.மேலும்மும்பை,டில்லி, சென்னை, அகமதாபாத்,கொல்கத்தா,புனே, கொச்சி, பெங்களூர் என 9 முக்கிய இந்திய நகரங்களிலும் ஒரே நேரத்தில் வெளியானது.
2 பாகங்களாக வெளியாகும் இந்த ராமாயணா படத்தின் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment