சம்பளத்தை விட கதை தான் முக்கியம்: ராஷ்மிகா

சம்பளத்தை விட கதை தான் முக்கியம்: ராஷ்மிகா
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. நேஷனல் கிரஷ் என
ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் அவர், தமிழ்,தெலுங்கு,

இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.அல்லு அர்ஜூனுடன் அவர் இணைந்து நடித்த புஷ்பா-2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் நடிப்பதற்கு அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் தரப்பட்டது.அதே போல் இந்தியில் உருவான

சாவா படத்தில் ரூ.4 கோடியும், முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படத்தில் ரூ.5 கோடியும்
ராஷ்மிகாவுக்கு சம்பளமாக வழங்கப்பட்டது.
இதனால் அவரின் அடுத்த அடுத்த படங்களுக்கு அதிகமாக சம்பளம்
கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனக்கு கதை தான் முக்கியம். சம்பளம் முக்கியம் இல்லை என அவர் கூறியிருக்கிறார். நல்ல கன்டென்ட் என்றால் சம்பளத்தை பற்றி கவலைப்படுவதில்லை என்றார் .

Comments (0)
Add Comment